தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகியது திரிணாமுல் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் மீதுடெஹல்கா டாட் காம் ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக்கு அளித்து வந்தஆதரவை வாபஸ் பெற்றது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.

இதுகுறித்து தலைநகர் டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம்கூறுகையில்,

ஆயுதப் பேர ஊழல் வழக்கிற்கு தார்மீகப் பொறுப்பேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவிவிலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்பினேன்.

ஆனால் அதுகுறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஆயுதப் பேர ஊழல்வழக்கு குறித்து விவாதிப்பதற்காக நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவி விலகத் தேவையில்லை என்றுமுடிவெடுக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ்பெற்றுக் கொள்கிறது என்றார்.

முன்னதாக, மம்தா பானர்ஜியும், அஜித் குமார் பாஞ்சாவும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் வாஜ்பாய்க்குஅனுப்பி வைத்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+