தமிழ் தீவிரவாதி மாறனுக்கு காவல் நீட்டிப்பு
சென்னை:
தமிழர் தேசிய விடுதலை படை தலைவரும், சந்தன வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியுமான மாறனின் காவலைஏப்ரல் மாதம் 4-ம் தேதிவரை நீட்டித்து தடா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
விழுப்புரம், குள்ளஞ்சாவடிகாவல் நிலையத்தை தாக்கிய வழக்கிலும், விழுப்புரத்தில் நடந்து தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாகவும் மாறன் மீது இரண்டாவது தடா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மாறன் சேலம் மத்திய சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு புதன்கிழமை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி சின்னப்பிள்ளை மாறனின் காவலை ஏப்ரல் மாதம் 4-ம் தேதி வரைநீட்டித்து தீர்ப்பளித்தார்.
மாறன் தான் சேலம் சிறையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும், தான் தனிமைச் சிறையில்அடைக்கப்பட்டிருப்பதாகவும், தனது உறவினர்கள் தன்னை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என கூறியும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்க அரசு சிறப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதால் இந்த மனு மீதானவிசாரணையை இந்த மாதம் 21-ம் தேதிக்கு நீதிபதி சின்னப்பிள்ளை ஒத்தி வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications