பூமியை நோக்கிய பயணத்தில் மிர் விண்கலம்
மாஸ்கோ:
கடந்த 15 ஆண்டுகளாக விண்ணில் மிதந்து கொண்டிருந்த ரஷியாவின் மிர் விண்கலம் புவியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கி விட்டது.
தற்போது பூமியிலிருந்து 240 கி.மீ. உயரத்தில் உள்ள மிர் விண்கலம் மார்ச் 22ம் தேதி பூமியை அடையும்.
மார்ச் 22ம் தேதி கிரீன்விச் நேரப்படி அதிகாலை 6 மணிக்குள் மிர் விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள ராக்கெட்டுகள் மூலம் விண்கலம் தகர்க்கப்பட்டுஅதன் பாகங்கள் தென் பசிபிக் கடலில் விழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமிக்கு மேல் உள்ள காற்று மண்டலத்தை கடந்து வரும் விண்கலத்தின் பாகங்கள் பல அங்கு ஏற்படும் உராய்வால் அழிந்து விடும். காற்றுமண்டலத்தால்பாதிக்கப்படாத விண்கலத்தின் பாகங்கள் மட்டும் கடலில் வந்து விழும்.
மிர் விண்கலம் கடந்து வரும் பாதையில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளால் விண்கலம் பயணிக்கும் வேகத்தை கணக்கிட முடியவில்லை. எனவே, விண்கலம் பூமியைஅடையும் நேரத்தை சரியாக கூற முடியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications