ஆயுதபேர ஊழல்: விசாரணை நடத்த பா.ம.க. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் உள்பட பல தலைவர்கள் மீது ஆயுத பேர ஊழலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளகுற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்து வேண்டும் என கோரியுள்ளது.

பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ஆயுத பேர ஊழல் குறித்துஎழுந்துள்ள பிரச்சனையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சரியான நிலைபாட்டை எடுக்கும்.

பா.ம.க. தற்போது மத சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசுக்கு பிரச்சனை வந்தால் அவர்களுக்கு உதவ வேண்டுமா என்பது குறித்து மதச்சார்பற்றகூட்டணிதான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணி எடுக்கும் முடிவின் படி பா.ம.க. செயல் படும்.

பாண்டிச்சேரியில் மூன்றாவது அணி அமைப்பதை தடுக்க முயற்சி எடுப்போம். மூன்றாவது அணி அமைந்தால், தற்போது பா.ம.க.வுக்குஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளை விட அதிக தொகுதிகளை அ.தி.மு.கவிடமிருந்து கேட்டு பெறுவோம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் த.மா.கா., அ.தி..மு.க.வுடன் இணைந்ததை எதிர்ப்பது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை எந்த விதத்திலும்பாதிக்காது.

தி.மு.க, பா.ம.க.வை அழிக்க முனைந்ததால், தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.க.தலைமையிலான கூட்டணியை விட்டுவெளியேறினோம்.

பொதுக் குழு கூட்டத்தில் ஜி.கே. மணி தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி பொதுச் செயலாளராகவும், பு,த.இளங்கோவன் துணைபொதுச் செயலாளராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கஅனுமதிக்கப்பட வேண்டும் என கூறினார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானமும்பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போது அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வரும் டாக்டர் ராமதாசின் மகனான அன்புமணிக்கு கட்சி பொறுப்பு கொடுக்கப்படும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த விதமான பதவியும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+