ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டேக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
ஐ.ஏ.எஸ்.அதிகாரி பாண்டேவிற்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சென்னை தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் விதித்த 4 ஆண்டு சிறைத்தண்டணையைஎதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருந்தார் முன்னாள் உள்ளாட்சித்துறை செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹெச்.எம்.பாண்டே.
தனது அப்பீல் மனுவில், தனி நீதிமன்றத்தின் 4 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதோடு தனக்கு ஜாமீன் அளிக்கவும் கோரியிருந்தார் பாண்டே.
இதனை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாலை சுப்ரமணியன், குற்றவியல் நடைமுறை சட்டப்படி ஏற்கனவே இரண்டு வழக்குகளில்சிறைத்தண்டனை பெற்றுள்ள பாண்டேக்கு ஜாமீன் தர முடியாது என கூறிவிட்டார்.
உள்ளாட்சிகளுக்கு கலர் டி.வி.வாங்கியதில் ஊழல் புரிந்ததற்காகவும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் பாண்டேவிற்குசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications