பாண்டி: "பா.ம.க. கூடுதல் இடங்கள் கேட்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனிக் கூட்டணிஅமைத்துப் போட்டியிடுமானால், அங்கு கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின்நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாண்டிச்சேரியில், தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸ்கட்சியும் தனித்துப் போட்டியிடுவது நல்லதல்ல.
தமிழகத்தைப் போலவே அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தே அவர்கள் போட்டியிட வேண்டும்என்று விரும்புகிறோம்.
ஒருவேளை அவர்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்தால், அங்கு நாங்கள் கூடுதல் தொகுதிகள் கேட்டுஜெயலலிதாவிடம் பேசுவோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications