ஊழலை அம்பலப்படுத்தியது ஏன்? டெஹல்கா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பத்திரிகை துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையே ஊழலை அம்பலப்படுத்தியது என்கிறார்டெஹல்கா டாட்காம் நிறுவனத்தின் நிருபர் அனிருத்தா பாகல்.

கடந்த 7 மாதங்களாக முயன்று இந்த ஊழலை வெளிக்கொணர்ந்ததாக கூறும் பாகல் இதற்காக அரசியல்வாதிகள்மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகை 11 லட்சம் என்கிறார்.

டெல்லியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாகல் தெரிவித்த தகவல்கள்:

இந்திய பத்திரிகை துறை தனது திறமையை எடுத்துக்காட்டுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.பத்திரிகைகள் மற்றும் மற்ற மீடியா நிறுவனங்கள் நீண்ட நாட்கள் காத்திருந்து அதிக செலவில் ஒரு செய்தியைவெளியிட விரும்ப மாட்டார்கள்.

பத்திரிகை துறை செய்தி தருவதோடு மட்டுமல்லாது ஒரு கண்காணிப்பு அமைப்பாக செயல்பட முடியும் என்பதைகாட்டவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ரகசிய முறையில் ஊழலை அம்பலபடுத்தியதை அநாகரிகமான செயல் என இந்த ஊழலால் பாதிக்கப்பட்டஅரசியல்வாதிகள் மட்டுமே கூறுகின்றனர். கிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்திய போதும் இதனையேதெரிவித்தனர்.

இதனால் மத்திய அரசிற்கு பாதிப்பு ஏற்படும் என்பது தவறு. முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மீதுசெக்ஸ் புகார் கூறப்பட்ட போதும் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனவே, மக்கள் செல்வாக்கு என்பது வேறு. இதனால், தேர்தலில் பாதிப்பு உண்டாகாது. இத்தகையநடவடிக்கைகளால் பத்திரிகை துறைக்கு புதிய பரிமாணம் அளிக்கப்பட்டு மேலும் பலர் இத்துறைக்கு வரவழிவகுக்கும் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+