இந்திய - பாக். பிரச்சனை தீர ஐ.நா.உதவும்: கோபி அன்னான்
டெல்லி:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான பிரச்சனை தீர மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. தயாராக உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் கோபிஅன்னான் தெரிவித்தார்.
வங்கதேசத்திலிருந்து டெல்லி வந்த கோபி அன்னான், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்திய - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தீர இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை துவங்க ஐ.நா உதவும்.
லாகூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை துவக்க இது சரியான நேரம். இரு நாடுகளும் தொடர்ந்து பனிப்போர் புரிவதால் இருநாடுகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
ஐ.நா. அமைப்பின் தீர்மானம் மூலம் இந்திய - பாகிஸ்தானிய பிரச்சனையை தீர்த்துவிட முடியாது. அதற்கு பதில் இரு நாடுகளும் இணைந்து கையெழுத்திட்டலாகூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப்பிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இருக்கிறார் முஸாரப். இரு நாடுகளுக்கும் இடையேயானபேச்சுவார்த்தையில் தேவையான வகையில் உதவ தயாராக இருக்கிறேன் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications