டெஸ்ட் மேட்ச்: இந்தியா அபார வெற்றி
கொல்கத்தா:
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்தியா வெற்றி கொண்டது.
இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 364 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கிய ஆஸி. அணிக்கு சரிவைஏற்படுத்தியவர்கள் ஹர்பஜன்சிங்கும், சச்சின் டெண்டுல்கரும்.
பாலோ-ஆன் பெற்ற அணி ஆட்டத்தில் வெல்வது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 3 வது முறையாகும்.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 171 ரன்களுக்கு இழந்தது. பாலோ-ஆன் பெற்ற பின்னர் தொடர்ந்து ஆடி 2வது இன்னிங்ஸில் 657ரன்களை எடுத்தது.
இதற்கு முக்கிய காரணம் வி.வி.எஸ்.லஷ்மணும்(281 ரன்கள்), ராகுல் திராவிட்டும்(180 ரன்கள்) தான். 5வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 376ரன்கள் எடுத்து சாதனை புரிந்தது.
364 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா, நிச்சயம் போட்டியில் வெற்றி பெறவோ அல்லது டிரா செய்யவோ முயற்சிக்கும் என்றநிலை இருந்தது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் தென்பட்டன.
இதனை நல்லமுறையில் பயன்படுத்திய ஹர்பஜனும், டெண்டுல்கரும் இந்தியா வெற்றி பெற காரணமாயினர்.இந்த வெற்றியை அடுத்த இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
ஹர்பஜன் இந்த போட்டியில் 13 விக்கெட்டுகளை எடுத்ததோடு ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார். இதனை பாராட்டி அவருக்கு ஒரு லட்ச ரூபாய்பரிசளிக்கப்பட்டது.
ஆட்டநாயகன் லஷ்மண்:
இந்த ஆட்டத்தில் அதிக ரன் குவித்த லஷ்மணுக்கு 3, 26, 000 ரூபாய் பரிசளிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகவும் லஷ்மண்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய - ஆஸி. அணிகளுக்கிடையேயான 3 வது டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் மார்ச் 18ம் தேதி துவங்குகிறது.












Click it and Unblock the Notifications