ஆயுதப்பேர ஊழல்: ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் மீதுடெஹல்கா டாட் காம் சுமத்தியுள்ளஆயுதப் பேர ஊழல் குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவு முழுவிசாரணை நடத்தும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் விட்டல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு பிரிவு ஆணையர் விட்டல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது குறித்து டெஹல்கா டாட் காம் ஆதாரத்துடன்குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கேட்டுக் கொண்டபடி கடந்த பிப்ரவரி 2000 ல் கடந்த15 ஆண்டுகளில் நடந்த ஆயுதப் பேர ஊழல் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினோம்.
விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜார்ஜ் பெர்னான்டஸிடம் கொடுத்தோம். ஆனால் அந்தவிசாரணை அறிக்கையில் ஆயுத பேர ஊழல் வழக்குகள் குறித்து போதுமான விஷயங்கள் கிடைக்கவில்லை.
மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவை பழிவாங்குவது போல் டெஹல்கா டாட் காம் நிறுவனத்தார் கூறியுள்ளஆயுதப் பேர ஊழல் வழக்கு உள்ளது. ஏனெனில் எங்களுக்குக் கிடைக்காத விவரங்கள் அவர்களுக்குக்கிடைத்துள்ளது.
ஆயுதப் பேர ஊழல்கள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவு ஏற்கனவே ஒரு அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்பித்தது. தற்போது மீண்டும் இன்னொரு அறிக்கையை மார்ச் 31 ம் தேதி சமர்பிக்க உள்ளோம்.
மேலும் தற்போது டெஹல்கா டாட் காம் கூறியுள்ள ஆயுதப் பேர ஊழல் குறித்தும் அறிக்கை சமர்பிக்க உள்ளோம்.இதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
தற்போது டெஹல்கா டாட் காம் வெளியிட்டுள்ள ஊழல் புகார்கள் குறித்தான விவரங்கள் அனைத்தையும்சேகரித்து வருகிறோம். ஆயுதப் பேரம் குறித்தான விவரங்களைச் சேகரித்த பின் தான் அது உண்மையா அல்லதுதிட்டமிடப்பட்ட சதியா என்பது குறித்து முடிவுக்கு வர முடியும்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் பாதுகாப்புத் துறை வீரர்கள், ராணுவத்தளபதி மற்றும் பலரிடம் விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்டது தொடர்பாக மேஜர் ஜெனரல் செளத்ரி உள்பட பாதுகாப்புத்துறையில் உள்ள நான்குஅதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவு சமர்பிக்கவுள்ள அறிக்கைகள் மிகவும் முக்கியமானதாகும்.
தற்போது டெஹல்கா டாட் காம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களையும் சேர்த்து விசாரணை நடத்தி வருகிறோம்.
மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவு ஆணையம் கொடுக்கும் அறிக்கைகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, டெஹல்கா டாட் காம் இன்டர்நெட் நிறுவனத்தார் பத்திரிக்கையாளர்கள் உள்பட பலருக்கு ஆயுதப்பேர ஊழல் குறித்து வீடியோ ஆதாரங்களை போட்டுக் காண்பித்தனர்.
அதில் இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக வெஸ்ட் என்ட் என்ற வெளிநாட்டு நிறுவன ஏஜன்டுகள்போல் நடித்த டெஹல்கா டாட் காம் நிருபர்களிடம், பாஜக தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதா கட்சித்தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் லஞ்சம் வாங்குவது தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications