3 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 19 ம் தேதி வரைஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்ய சபாவில், எதிர்க்கட்சிகள் ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து கூச்சல் போட்டதைத் தொடர்ந்து ராஜ்யசபா மார்ச் 19 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவிலும் அமளி:
லோக்சபாவில், எதிர்க்கட்சிகள் வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டது.
காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டதைத் தொடர்ந்து லோக்சபாவிலும் அமளிஏற்பட்டது.
அவர்கள் ஆயுதப் பேர ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வாஜ்பாய் உத்தரவிட வேண்டும். ஊழலுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வாஜ்பாய் அரசுபதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் போபர்ஸ் ஊழல் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து பெரும் அமளிஏற்பட்டது. ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சபை நடுவே வந்து கூச்சல் போட்டதால் சபை போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதற்குப் பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளையும் மார்ச் 19 ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் பாலயோகி தெரிவித்தார்.யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications