பா.ஜ.க. அலுவலகத்தின் மீது கல் வீசி தாக்குதல்
மும்பை:
தெற்கு மும்பையில் இருக்கும் பா.ஜ.க. அலுவலகத்தின் மீது 150 பேர் கொண்ட கலகக் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இவர்கள்அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை சேதப்படுத்தினர். பின் அலுலக்த்திற்குள்ளும் கற்களை வீசினர்.
இது குறித்து பா.ஜ.க.வின் மூத்த அதிகாரி ராஜ் புரோகித் தெரிவிக்கையில், கல்வீச்சு நடந்த போது, பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவர் கோபிநாத்முன்டேயும் வேறு பல தலைவர்களும் அலுவலகத்தில் இருந்தனர்.
மாலை 3 மணியளவில் 150 பேர் கொண்ட கும்பல் அலுவலக்தின் முன் கூடி சோனியா காந்தி ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனர். பின் அலுவலகத்திற்குவெளியே வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். பின் அலுவலகத்திற்குள் கற்களை வீசி எரிந்தனர்.
போலீசார் வந்தவுடன் கலவரக்கார்ரகள் ஓடி விட்டனர். இது ஆளும் மாநில அரசின் சதித்திட்டம். கலவரக்காரர்கள் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர்கள். நகரில் 144 தடைச் சட்டம் அமலில் இருக்கும் போது எவ்வாறு 150 பேர் கொண்ட கூட்டம் வர முடியும்?
கலவரர்களுடன் நடந்த மோதலில் பல பா.ஜ.க. தொண்டர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் என்றார்.
குபி பரேட் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications