விவசாயிகளுக்காகப் போராடும் முன்னாள் சி.பி.ஐ டைரக்டர்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தோ, சாதி, சமய இயக்கங்களில் சேர்ந்தோ,தங்களது பெயரையும் புகழையும் மேலும் வளர்த்துக் கொள்ள முயல்கின்றனர்.

தலைமைத் தேர்தல் கமிஷனராகப் பொறுப்பு வகித்த சேஷன் முதல், ஐ.ஏ.எஸ் அதிகாரி மலைச் சாமி வரைஎல்லோரும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசியல் வாடையே வேண்டாம், அப்படி இருந்தால், நான்கூட்டத்திற்கு வரமாட்டேன் என விவசாயிகளின் நலன் காக்க களத்தில் இறங்கியுள்ளார் முன்னாள் சி.பி.ஐ.டைரக்டர் கார்த்திகேயன்.

ஏற்கனவே ஆன்மீக அறக்கட்டளை ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்ட டி.ஆர் கார்த்திகேயன், இப்போதுவிவசாயிகளுக்காக ஒரு இயக்கத்தைத் துவங்கியுள்ளார். இதற்கு தேசிய விவசாயிகள் இயக்கம் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயக்கம் குறித்து முன்னாள் எம்.பியான டாக்டர் முருகேசன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன் காக்கவும், சாத்வீக முறையில் மத்திய மாநில அரசுகளை அணுகிவிவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்கவும், ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இந்த தேசிய விவசாயிகள் இயக்கத்தின் சார்பாக அரசிடம் பேச ஒரு பிரதிநிதியாக முன்னாள் போலீஸ் அதிகாரிகார்த்திகேயன் கிடைத்துள்ளார். அவர் அரசியல் வாடையோ, போராட்ட எண்ணமோ இருந்தால் இங்கு நடக்கும்கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

எனவே, அரசியல் வாடையோ, போராட்டமோ இந்த இயக்கத்தில் இருக்காது. இதன் மாநில மாநாடு மார்ச் 17 ம்தேதி கோவையில் நடக்கவுள்ளது என்றார் முருகேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+