மூப்பனாரைச் சந்தித்தார் ப.சிதம்பரம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், த.மா.கா.- அ.தி.மு.ககூட்டணியை தீவிரமாக எதிர்த்து வருபவருமான ப.சிதம்பரம் வியாழக்கிழமை அவரது வீட்டில் சந்தித்துப்பேசினார்.
அ.தி.மு.கவுடன் கூட்டணி ஏற்படுத்தியதற்காக மூப்பனாரை பகிரங்கமாக எதிர்த்துள்ளார் ப.சிதம்பரம். கூட்டணிமுடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கைகள் மூலம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிதம்பரத்திற்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், மூப்பனார் வீட்டுக்கு திடீரெனவியாழக்கிழமை ப.சிதம்பரம் சென்றார். அங்கு அவருடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார்.
மூப்பனாரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய சிதம்பரம் அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், உடல்நலம் விசாரிக்கவே இங்கு வந்தேன். வேறு விசேஷம் ஏதுமில்லை என்று மட்டும் கூறி விட்டுச் சென்று விட்டார்.
இருப்பினும், கூட்டணி தொடர்பாக தான் தெரிவித்துள்ள கருத்துக்களை மூப்பனாரிடம் விளக்கவே சிதம்பரம்வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணி தொடர்பான தனது கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தியும் சிதம்பரம்,மூப்பனாரிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications