ஊழலை வைத்துத்தான் பிரச்சாரம் செய்வோம்: ஜெயா
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் ஊழலை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வோம் என்றுஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியின் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இதுகுறித்துசென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் சட்டசபைத் தேர்தலில் ஊழலை மையமாக வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படும் என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
நாங்கள் கருணாநிதியின் ஊழலையும், அவரது கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ள மக்கள் தமிழ் தேசம் கட்சியின்தலைவர் கண்ணப்பனின் ஊழலையும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் நினைவு கூறுவோம்.
பல வழக்குகளில் எனக்கு தீர்ப்புக்கள் கூறப்பட்டிருப்பதால் நான் தேர்தலில் நிற்கக் கூடாது என்று கூறி வருகிறார்கருணாநிதி.
ஆயுதப் பேர ஊழலில் சம்பந்தப்பட்டு தற்போது ராஜினாமா செய்துள்ளார் ஜார்ஜ் பெர்னான்டஸ். இவர் இரண்டுவருடங்களுக்கு முன்பே ராஜினாமா செய்ய வேண்டியவர்.
ஏதாவது செய்து ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதுதான் பிரதமர் வாஜ்பாயின் எண்ணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கறிஞர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்:
முன்னதாக, அதிமுக வழக்கறிஞர் சங்கரலிங்கத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்ஜெயலலிதா.
அதிமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ரூ 2 லட்சம் கொடுக்க முயன்றதால் ஜெயலலிதாஇந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications