ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்பட சமதா கட்சியைத் சேர்ந்த 4அமைச்சர்கள் வியாழக்கிழமை இரவு ராஜினாமா செய்தார்.

இந்திய ராணுவத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல் நடப்பதாக டெஹல்கா டாட் காம் என்ற இன்டர்நெட் நிறுவனம்புகார் கூறியது.

இதற்கு ஆதாரமாக கடந்த செவ்வாய்க்கிழமை வீடியோவில் பதிவு செய்த ஆதாரங்களையும் வெளியிட்டது.

இது இந்திய அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காருலட்சுமண் மற்றும் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த திரிணாமூல் காஙகிரஸ் கட்சியும் தனது ஆதரவை வாபஸ் பெற்றது.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் நெருக்கடி கொடுத்துவந்தன.

இதற்கிடையே நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். அவர், தனது ராஜினாமா கடிதத்தைபிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ஆயுதப் பேர ஊழல் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும். எனது மேல்கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யான தகவல்கள். நான் எந்த விசாரணைக்கும் தயார் என்றார்.

மம்தா பானர்ஜி, அஜித் குமார் பாஞ்சா மற்றும் ஜார்ஜ் பெர்னான்டஸின் ராஜினாமா கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

3 அமைச்சர்கள் ராஜினாமா:

ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து சமதா கட்சியைச் சேர்ந்த மற்ற 3 அமைச்சர்களான நிதிஷ்குமார், திக் விஜய் சிங், சீனிவாச பிரசாத்ஆகியோரும் ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே கடந்த 6 வாரங்களுக்கு முன் பாமக வில் இருந்த 6 எம்.பி.க்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினர். தற்போது திரிணாமுல்காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது.

இதனால் வாஜ்பாய் அமைச்சரவையில் இப்போது 299 எம்.பி.க்கள் உள்ளனர். இருப்பினும் நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் அரசுக்கு போதுமானஎம்.பி.க்கள் உள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+