காசு கொடுத்தால் சீட் கிடையாது: ஜெயா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவில் சீட் கேட்க விரும்பும் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் முறையான வழியில் மட்டுமே அணுகவேண்டும். பணம் கொடுத்து சீட் வாங்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை சென்னையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், அதற்கான, முறையான வழியிலேயே அணுகவேண்டும்.
பணம் கொடுத்து சீட் வாங்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல,தொண்டர்களிடம் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்க முயல்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications