மத்திய அரசு கவிழாது .. கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திரினாமுல் காங்கிரஸ் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதுமத்திய அரசு ஆட்சியின் ஸ்திரத்தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது என தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இருக்கும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்குபேட்டியளித்த கருணாநிதி கூறுகையில், திரினாமுல் காங்கிரஸ் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது மத்திய அரசின் ஸ்திரத்தன்மையை பாதிக்காது என்றாலும், டெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழல்குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டும், மம்தா பானர்ஜி ஆதரவை விலக்கிக் கொண்டது மத்திய அரசிற்கு இதுபின்னடைவு என்பதை மறுக்க முடியாது.

இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடக்க விடாமல் தடை செய்வது, பா.ஜ.க, அலுவலகங்களுக்கு தீவைப்பது போன்றவை எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்பதையே காட்டுகிறதுஎன்றார்.

டெஹல்ா டாட் காம் இன்டர் நெட் நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டில் எதுவும் தெளிவாக தெரியவரவில்லை.இதுவரை ரூ 1 கோடியோ அல்லது ரூ 2 லட்சமோ கட்சி நிதியாக பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணனிடம்கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சில பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியலில்லை.

அரசுக்கு தனது தரப்பு கருத்துக்களை கூறும் வாய்ப்பை எதிர்கட்சியினர் வழங்கவில்லை. அந்த மாதிரி வாய்ப்புவழங்காமல் அரசை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவது நியாயமில்லை.

ஆயுதம் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது முறையான டென்ட அறிவிக்கப்படாமல் ஆயுதங்கள்வாங்கப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் விரிவானவிவாதம் நடத்தப்பட்டாலே மக்களுக்கு உண்மை தெரிய வரும்.

குற்றம் செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+