நான் நிரபராதி: முல்லைவேந்தன்
தர்மபுரி:
நான் நிரபராதி என்பதை நிரூபித்து பொய் வழக்குப் போட்டவர்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்வேன்என முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேசினார்.
தர்மபுயில் தொண்டர்களிடையே முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேசியதாவது:
சி.பி.ஐ போலீசார் வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக எனது பெயரையும் சேர்த்து வழக்குத்தொடர்ந்துள்ளனர். அவர்கள் சரியான மு றையில் விசாரணை செய்யாமல், என் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதில் எந்த உண்மையும் இல்லை என்பது நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தெரியவரும். நான் நிரபராதி என்பதைநிரூபிப்பேன். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளாமாக நான் கடுமையாக உழைத்துள்ளேன்.
கட்சி, சாதி, வகுப்பு, இன வேறுபாடின்றி அனைவருக்கும் உதவியுள்ளேன். கட்சிக்காக நான் எதையும் தியாகம்செய்யத் தயாராக உள்ளேன். என் மீது பொய் வழக்குப் போட்ட அரசு அதிகாரிகள் மீதும், காவல்துறையினர் மீதும்மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர உள்ளேன் என்றார் முல்லைவேந்தன்.












Click it and Unblock the Notifications