வாஜ்பாய்க்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு ஆதரவு
டெல்லி:
பாதுகாப்புத் துறை ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்த தயார் என்றுடெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகமுடிவெடுக்கப்பட்டது.
ஆயுதப் பேர ஊழல் குறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் முடிந்த பின் ஜார்ஜ் பெர்னான்டஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சமதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நிதிஷ்குமார், திக் விஜய் சிங், சீனிவாச பிரசாத் ஆகியோரின் ராஜினாமாவை நிராகரித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். இதற்குதேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர்.
இவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.
முன்னதாக, ஜார்ஜ் பெர்னான்டஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நீடிப்பார் என்றும்முடிவெடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications