4 மாதங்களுக்குள் விசாரணை முடியும்: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து அடுத்த நான்கு மாதங்களுக்குள் விசாரணைநடத்தி முடிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்தெரிவித்தார்.

வாஜ்பாய் உரை விவரம்:

ஆயுதப் பேர ஊழல் வழக்கில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்ஈடுபட்டிருப்பது துர்திருஷ்டவசமாகும். கடந்த 52 ஆண்டுகளாக பாரதிய ஜனதாகட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் இதே போல் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும்ஊழலில் ஈடுபடவில்லை. இப்போது அப்படி ஈடுபட்டுள்ளதாக டெஹல்கா டாட் காம்குற்றச்சாட்டு கூறியிருப்பது துர்திருஷ்டவசமானது.

ஆயுதப் பேர ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டது தொடர்பாக பங்காரு லட்சுமண் மற்றும்ஜெயா ஜெட்லி ஆகியோர் ராஜினாமா செய்து விட்டனர்.

நாட்டின் பாதுகாப்பையே சீர்குலைக்கும் வகையில் நடந்துள்ள இந்த ஊழல் இனிமேல்நடக்கக் கூடாது. நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் பங்கம்விளைவிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது. எந்த அரசியல்வாதியும்இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து நடக்கும் அனைத்து விசாரணைக்கும் தேசியஜனநாயகக் கூட்டணி அரசு தயாராக உள்ளது. விசாரணை வரும் 4 மாதங்களுக்குள்முடிவடையும்.

இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதி முன்னிலையில் நடக்கும்.

இவ்வாறு வாஜ்பாய் தனது உரையில் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+