இந்தியாவில் வாழும் 1.27 லட்சம் தாவரங்கள், விலங்குகள்
கோவை:
இயற்கைவளம் நிறைந்த நாடாக இந்தியா திகழ்ந்தாலும், உயிரி தொழில்நுட்பத்தில் ஏழை நாடாகவே திகழ்கிறது என தேசிய தாவரவியல் ஆய்வு மையஇயக்குநர் புஷ்பகாந்தன் தெரிவித்தார்.
கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தேசிய தாவரவியல் ஆய்வு மைய இயக்குநர் புஷ்பகாந்தன் பேசியதாவது:
உலகிலேயே இந்தியா தான் இயற்கை வளத்தில் சிறந்த நாடாக விளங்குகிறது. இந்தியாவில் 1.27 லட்சம் வகையான தாவரங்களும் விலங்கினங்களும்அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் அடையாளம் காணப்படாத நுண்ணியிரி வகைகளும் ஏராளமாக உள்ளன.
மேலும், மருத்துவக்குண நலன்கள் மிக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர வகைகள் நமது காடுகளில் நிறைந்துள்ளன. இத்தகைய தாவரங்கள்காடுகளில் 85 சதவீதம் உள்ளது.
இத்தகைய இயற்கை வளம் நிறைந்த நாடாக இருந்தாலும், உயிரிதொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் ஏழை நாடாகவே இருந்து வருகிறது. இதற்கு நேர்மாறாக வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளன.
தற்போதுள்ள மருத்துவ தாவரங்களைக் கொண்டு எய்ட்ஸ், புற்றுநோய், காசநோய் ஆகிய நோய்களை எளிதாக நம்மால் குணப்படுத்த முடியும். அதற்கேற்பதொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காண வேண்டும்.
மரபியல், பல்லுயிர் பண்புகளை ஆய்வு நடத்தினால், இந்தியாவிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை என்றார்புஷ்பகாந்தன்.












Click it and Unblock the Notifications