கடும் வறட்சி: முதுமலை சரணாலயம் மூடல்

Subscribe to Oneindia Tamil

கோவை:

நீலகிரியில் உள்ள முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் கடும் வறட்சி காரணமாக மூடப்படுகிறது. ஏப்ரல் 15ம் தேதி வரை சரணாலயம்மூடப்பட்டிருக்கும்.

நீலகிரியில் உள்ள முதுமலை வன விலங்குகள் சரணாலயம் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. இப்போது நீலகிரி மலையில்ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை அடுத்து இந்த சரணாலயத்தை அரசு தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது.

மேலும் தேசிய பூங்காவிலும் கடுமையான வெப்பம் நிலவுவதால் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பூங்காவும்மூடப்பட்டுள்ளது. அடுத்த ஏப்ரல் 15ம் தேதி வரை இந்த சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருக்கும் என வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த ஆடுகளின் எண்ணிக்கை இப்போது 441 ஆக உயர்ந்துள்ளது.இதற்கான கணக்கெடுப்பு மலைவாசி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

50 குழுக்களாக செயல்பட்ட இந்த மலைவாசியினர் ஆடுகளின் எண்ணிக்கை 441 ஆக உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர். மேலும்,இக்கணக்கெடுப்பின்போது இரண்டு சிறுத்தைகள் மற்றும் பல வகை மான்கள், சிங்கவால் குரங்குள் ஆகியவற்றையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+