மலேசியா: ஒதுக்கப்படும் தமிழர்கள்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மலேசியாவின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கிய தமிழர்களின் நிலை மலேசியாவில் தற்போது பரிதாபமாக உள்ளது.தற்போது வளர்ச்சியடைந்த நாடாக உள்ள மலேசியா தனது வளர்ச்சிக்கு பாடுபட்ட இந்தியர்களை அதிலும் தமிழர்களை ஒதுக்கி வருகிறது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு தெற்கே அமைந்துள்ள பகுதி தாமன் தெசரியா. இங்கு மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் வசித்துவருகின்றனர். வறுமை தாண்டவமாடும் இப்பகுதியல் நிகழும் இன மோதலுக்கு பலர் பலியாவது வாடிக்கை.

இப்பகுதி மலேசியாவிலேயே அதிகளவில் வன்முறையால் பாதிக்கப்படும் பகுதியாகும். கடந்த ஆண்டு 53 பேர் இப்பகுதியில் வன்முறைக்கு பலியாகினர்.

கடந்த வாரம் நடைபெற்ற மலாய் மற்றும் இந்தியர்களுக்கிடையே நடைபெற்ற இன மோதலில் 6 பேர் உயிர் இழந்தனர்.

1969ம் ஆண்டு நடைபெற்ற சீன - மலாய் இன மோதலில் 200 பேர் வரை பலியாகினர். அதன் பிறகு கடந்த 98ம் ஆண்டு நடந்த இந்து - முஸ்லீம்இன மோதலில் 9 பேர் பலியாகினர்.

மலேசிய அரசின் நடவடிக்கைகளால் இன மோதல்கள் பெரிய அளவில் ஏற்படா விட்டாலும் அடிக்கடி தாமன் தெசரியா பகுதியில் மோதல்கள்ஏற்படுவதுண்டு.

டாக்ஸிகள் கூட வரத்தயங்கும் இப்பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலோர் தமிழர்கள். ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த அவர்கள்தற்போது இப்பகுதியில் குடியேறி உள்ளனர்.

வேலை வாய்ப்புக்கள் இல்லாததால் இவர்கள் தவறான வழியில் செல்கின்றனர். போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதசெயல்கள் இப்பகுதியில் நடைபெறுகின்றன.

மலேசிய மக்களில் பத்தில் ஒரு பங்கு உள்ள இந்தியர்கள் அங்கு அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மலேசியாவில் செயல்படும்பல்வேறு குண்டர் படைகளில் இந்தியர்கள் அதிக அளவில் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்தியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த மலேசிய அரசியல் ஆலோசகரான ராமசாமி, மலாய் இனத்தவரின் முன்னேற்றத்தில்மட்டும் அக்கறை காட்டும் மலேசிய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கின்றனர் இந்தியர்கள்.

அரசின் கணக்கெடுப்பின் போது, இந்தியர் என தங்களை குறிப்பிடாமல் மற்ற இனத்தவர் என தெரிவிப்பதால் இந்தியர்களின் உண்மையான மக்கள்தொகை சரியாக கணக்கிட முடியவில்லை.

மலேசிய இந்தியர்களில் முக்கால்வாசிப் பேர் ஏழைகள். தெருவை சுத்தம் செய்வது, குப்பைகளை பொறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனினும், மலேசிய டாக்டர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள். அங்குள்ள நீதிமன்ற வக்கீல்களில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியர்களே.

கடந்த வார வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் சாமிவேலு. மலேசியஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னால் அழ மட்டுமே முடியும் என தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்.

இந்த இன மோதல் தொடர்பாக 6 ராணுவ வீரர்கள் உள்பட 75 பேர் மீது மலேசிய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்றுமாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்று குற்றம்சாட்டப்பட்டவர்களில் 2 பேருக்கு 6மாத சிறைத்தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு அடுத்த விசாரணைவரை ஜாமீன் அளிக்கப்பட்டதாக மலேசிய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+