தேசத்தை விற்றுவிட்டது பா.ஜ.க: சோனியா கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தேசிய பாதுகாப்பை பாரதிய ஜனதா விலைபேசி விற்றுவிட்டது என சோனியாகாந்திபா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரசின் உயர்மட்டக் குழுவான, அனைதிந்திய காங்கிரஸ் கமிட்டியின் இரன்டுநாள் கூட்டத்ததை பெங்களூரில் துவக்கிவைத்து பேசிய சோனியா வாஜ்பாய்ராஜினாமா செய்ய வேண்டும்.என்றார். தொடர்ந்து பா.ஜ.கவை கடுமையாக தாக்கிபேசினார்.

சோனியா தனது துவக்க உரையை இந்தியில்நிகழ்தினார். அவர் பேசியதாவது;

நாங்கள் ஆளும் கட்சி இந்த அளவுக்கு மோசமாக செயல்படும் என எண்ணவில்லை.தெஹல்கா டாட் காம் வெளிப்படுத்தியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஆளும்கட்சியினர் தேச பாதுகாப்பை விலை பேசி விற்றுவிட்டனர். வாஜ்பாய் பதவியைராஜினாமா செய்ய வேண்டும்.

அரசு முழுமையாக ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு ஆட்சியைபாதுகொள்வதற்காக பிரதமர் பேசிய பேச்சை அனைவரும் கேட்டோம்.

பிரதமர் நாடாளுமன்றத்தில் இந்த ஊழல் விஷயம் குறித்து விவாதிக்க வேண்டும்என்கிறார். அதை ஏற்க முடியாது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது என்னசெய்தார்கள் என்பதை மறந்து விட்டு அவர் பேசுகிறார்.

நாங்கள் அவர்களிடம் நேர்மையுயம், நியாயத்தையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால்இவ்வளவு மோசமான நிலையையும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.கவினர். முன்னாள்பிரதமர் இந்திராகாந்தி மீதும் ராஜீவ் காந்தி மீதும் எண்ணற்ற பொய் குற்றச்சாட்டுகளைசுமத்தினர். தங்கள் வாழ்நாளை காங்கிரஸ் மீது பொய் குற்றம் கூறுவதிலேயே அவர்கள்கழித்தனர் என்றார்.

கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண் டனர். பெரும்பாலனவர்கள்காங்கிரசின் பாரம்பரிய உடையான வெள்ளை சீருடையில் வந்திருந்தனர். சோனியாகாந்தி பா.ஜ,கவை தாக்கிய போது காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து கர கோஷம்எழுப்பியவண்ணம் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானமும் ஆயுத பேர ஊழலையே மையமாககொண்டிருந்தது.

பா.ஜ.க. கூறி வந்த நியாயம், தேச பக்தி போன்றவை ஏமாற்று வேலை என்பதுநிரூபணமாகி விட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ராஜினாமா செய்ய வேண்டும்.

பா.ஜ.க, மக்கள் ஆதரவை இழந்து விட்டது. மக்கள் தங்களுக்கு துரோகம்இழைக்கப்பட்டுள்ளதற்காக வருந்துகின்றனர். அரசியல் அமைப்பின் மீது மீண்டும்நம்பிக்கை கொள்ள வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் ஆயுத பேர ஊழல் குறித்துமக்களிடம் விவரித்து கூற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+