மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.....
சென்னை:
தந்தை கருணாநிதி கோடு போட்டால் ரோடு போடுகிறார் மகன் ஸ்டாலின்.
தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு திமுக தலைமை அறிவித்த மூவர் குழுவில் சென்னை மேயர்ஸ்டாலின் பெயர் கிடையாது. ஆனாலும், திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை இழுத்து வருவதில் அவர்வெற்றி பெற்றுள்ளார்.
தனக்கும் அரசியல் சாணக்யம் தெரியும் என்பதை காட்ட இந்த தேர்தலை பயன்படுத்தி கொணடிருக்கிறார்ஸ்டாலின்.
பதில் சொல்லாமல் காலங்கடத்தி கொண்டிருந்த மூப்பனாரின் முடிவுக்காக ஏங்கியவர் விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் தலைவர் திருமாவளவன்.
அவரிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக கூட்டணியில் மூப்பனாருக்கே அதிக தொகுதிகள் கிடைக்காது. அதிலிருந்துஅவர் விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிகம் தரமாட்டார்.
திமுகவிற்கு வந்தால் அதிக சீட் கிடைக்கும் என்றார் ஸ்டாலின். அதை நம்பி வந்த திருமாவளவனிற்கு 7 சீட்கள்அளிக்கப்பட்டன.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, த.மா.கா.வில் இருந்து விலகிய ஹாரூன்,எம்.எல்.ஏவின் தமிழ்நாடுஐக்கிய முஸ்லீம் ஜமாத் கட்சிகளுடன் பேசி திமுக கூட்டணிக்கு இழுத்து வந்துவிட்டார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி, மற்றொரு முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி கட்சிகளை தி.மு.க. கூட்டணிக்கு இழுத்து வந்ததில் பெரும்பங்கு வகித்தவர் ஸ்டாலின்.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி பற்றி கருணாநிதி கடந்த வாரம் தான் நினைத்தார்.மிக விரைவாக செயல்பட்ட சென்னை மேயர் இந்த வாரம் அக்கட்சியை திமுக கூட்டணியில் இணைக்க ஏற்பாடுசெய்துவிட்டார்.
கடந்த 96ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் தவிர வேறு தேர்தல் கால அரசியல் நடவடிக்கையில் எதிலும்ஸ்டாலின் இறங்கவில்லை.
தற்போதைய தேர்தல் தனது தந்தை போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் அடுத்து அரியாசனம் ஏற கனவுகாண்கிறார் ஸ்டாலின். இதனால், தனது திறமையை காட்ட அரசியல் கட்சிகளை வளைத்து போட்டுக்கொண்டிருக்கிறார்.
இதுவரை தனது அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு மந்திரி பதவி தரவில்லை கருணாநிதி. அதற்கு பதில் தனிஅரசாங்கம் நடத்த சென்னை மேயர் பொறுப்பை அளித்தார். எல்லோரும் புகழ பாலங்கள் பல கட்டி சென்னையைஅழகுபடுத்துகிறார். சென்னை மேயராக சிறப்பாக செயல்படுகிறார் என தனது மகன் பற்றி பெருமைப்படுகிறார்கருணாநிதி.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் உள்ள ஸ்டாலின் மிசா சட்டம் அமலில் இருந்த போது சிறைசென்றவர். இந்திரா காந்தியின் தூண்டுதலின்பேரில் சிறையில் கடும் துயரங்களை அனுபவித்தவர். கட்சியின்இளைஞரணித் தலைவராக பலகாலம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
தற்போதைய தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், கருணாநிதி ஓரிரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்து விட்டுகட்சி பணியாற்றவும், இலக்கிய பணியாற்றவும் சென்று விடுவார். அவர் விட்ட முதல்வர் பணியை தொடர்ந்துநடத்த ஸ்டாலினே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
ஸ்டாலினுக்குப் போட்டியாக இருந்ததால் தான் வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி. இதைவைகோவே பல முறை கூறியுள்ளார். ஸ்டாலினுக்குப் போட்டியாக வந்ததால் தான் மூத்த மகன் அழகிரியையும்தட்டி வைத்துள்ளார்.
திமுகவைப் பொறுத்தவரை ஜனநாயக முறையில் தான் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறார் கருணாநிதி. ஆனால், ஸ்டாலினுக்கு தான் அளித்து வரும் முக்கியத்துவத்தின் மூலம்கட்சியினருக்கு மறைமுகமாக கருணாநிதி ஏதோ சொல்வது தெரிகிறது.
அது என்ன என்பது அந்த ஜனநாயகத்துக்கே வெளிச்சம்!












Click it and Unblock the Notifications