த.மா.கா.விலிருந்து ப.சிதம்பரம் நீக்கப்படுவார்
சென்னை:
த.மா.கா. ஜனநாயகப் பேரவை என்ற புதிய அமைப்பைத் துவக்கியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்என்று தெரிகிறது.
த.மா.காவும், அதிமுகவும் செய்து கொண்ட கூட்டணி உடன்பாட்டை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடுமையாக எதிர்த்துஅறிக்கை விட்டார். கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கைக்கு கட்சித் தலைமையிடமிருந்து எந்தப் பதிலும்வரவில்லை. இதையடுத்து கூட்டணியை எதிர்த்துப் பிரசாரம் செய்ய புதிதாக ஒரு அமைப்பை துவக்கியுள்ளார் சிதம்பரம்.
இதனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்தின் புதிய அமைப்பு குறித்து கட்சித் தலைவர் மூப்பனார் வீட்டில் தலைவர்கள்கூடிப் பேசி வருகின்றனர்.
சனிக்கிழமை மூப்பனாருடன் நடந்த ஆலோசனையின்போது, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சென்னைமாநகராட்சி த.மா.கா தலைவர் வெற்றிவேல், சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று த.மா.கா. வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அப்படியே எடுத்தாலும், அது கட்சியின் தேர்தல்வெற்றி வாய்ப்பை பாதிக்காதவாறு யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications