லத்தீப்புக்கு தேசிய லீக் கல்தா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அப்துல் லத்தீப் தலைமையிலான இந்திய தேசிய லீக் அதன் தலைவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

கட்சியின் அமைப்புச்செயலராக இருந்த நிஜாமுதீன், எம்.எல்.ஏ, அக்கட்சியின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூடிய கட்சியின் பொதுக்குழு முறையான தீர்மானம் நிறைவேற்றி லத்தீபை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. லீகின்சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர் பதவியில் இருந்தும் லத்தீப் நீக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்ற இந்திய தேசிய லீக் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து லத்தீப் பெயரை நீக்ககோரி சட்டமன்ற செயலருக்கு கடிதம் எழுதவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிஜாமுதீன் தலைமையிலான இந்திய தேசிய லீக் கட்சியே உண்மையான இந்திய தேசிய லீக் என அறிவித்துள்ளது.

த.மா.கா.வில் இருந்து விலகி கடந்த மாதம் கட்சி ஆரம்பித்த ஹாரூன் எம்.எல்.ஏ, தி.மு.க. கூட்டணியில் இணைந்து 3 சீட்களை பெற்றுள்ளார்.

அவரை விட அதிக அனுபவம் உள்ள அப்துல் லத்தீப் முஸ்லீம்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுக கூட்டணியில் ஒரு சீட் மட்டும் பெற்றுள்ளார்.

இதனால், கொந்தளித்த லீகின் சட்டமன்ற உறுப்பினரான, நிஜாமுதீன் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி அதிரடி நடவடிக்கை எடுத்தள்ளார்.

இவரின் அடுத்த கட்ட நடவடிக்கை திமுக கூட்டணியில் சேருவதா, மூன்றாவது அணிக்கு போவதா, அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவுசெய்வதாகும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+