எங்கள் பின்னால் டெஹல்கா: ஜெட்லி
டெல்லி:
நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்ததால் ஜார்ஜ் பெர்னான்டஸையும், அவருடைய கட்சியான சமதா கட்சியின் தலைவராக இருந்ததால்என்னையும் டெஹல்கா டாட் காம் புலனாய்வு செய்யும் முயற்சியில் எப்போதும் எங்களைத் தொடர்ந்து வந்துள்ளது என ஜெயா ஜெட்லிகுற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
டெஹல்கா டாட் காம் நிருபர்கள் என்னையும், ஜார்ஜ் பெர்னான்டஸையும் சுற்றி சுற்றி வந்து மோப்பம் பிடித்து படு குழியில் தள்ளி விட்டார்கள்.
நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பதால் அவருக்கு முதலில் வலை விரித்துள்ளது டெஹல்கா டாட் காம்.
பா.ஜ.க.தலைவர் பங்காரு லட்சுமண், ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் என்னைப் பதவியிலிருந்து இறக்கி சாதனைப் படைத்து விட்டதாகக் கருதுகிறதுடெஹல்கா டாட் காம்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதே டெஹல்கா டாட் காமின் முக்கியக்குறிக்கோள். இதற்காக 8 மாதங்களாகப் போராடியிருக்கிறது டெஹல்கா டாட் காம்.
டெஹல்கா டாட் காம் ஊழியர்கள் செய்யும் நிழல் வேலைகளை நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயா ஜெட்லி கூறியுள்ளார்.
முன்னதாக, டெஹல்கா டாட் காம் ஆயுதப் பேர ஊழல் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ படக் காட்சியில் ஜெயா ஜெட்லி மற்றும் பங்காரு லட்சுமண்ஆகியோர் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கிடையே ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ள ஜெயா ஜெட்லி கூறுகையில், நாங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறையில் இருப்பவர்கள். எங்களுக்குப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை நாங்கள் ஒருபோதும் தவறாக உபயோகப்படுத்தமாட்டோம் என்றார் ஜெயா ஜெட்லி.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications