ப.சிதம்பரத்துக்கு 3 தொகுதிகள்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பைத் துவக்கி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ப.சிதம்பரம் அமைப்புக்கு 3தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்படுத்தியதை எதிர்த்த முன்னாள் அமைச்சரும், மூத்த த.மா.கா. தலைவருமான ப.சிதம்பரம்புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிமுக-தமாகா கூட்டணியை எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனது அமைப்பின் ஆதரவை தெரிவிப்பதற்காக சமீபத்தில் முதல்வர் கருணாநதியை அண்ணா அறிவாலயம் சென்று சந்தித்தார். அப்போதுவாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை த.மா.கா ஜனநாயகப் பேரவை அமைப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் புரசை ரங்கநாதன், காரைக்குடி சுந்தரம் ஆகியஇருவரும் அண்ணா அறிவாலயம் வந்தனர். முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தனர்.
அவர்களுடன் பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், ப.சிதம்பரத்தின் தமாகா ஜனநாயகப் பேரவை அமைப்புக்கு 3தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் சிதம்பரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவர்.
திமுக, 155 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடும். புதிய தமிழகம் கட்சியுடன் திங்கள்கிழமை மாலையில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவுசெய்யப்படும் என்றார்.
ஏற்கனவே சிதம்பரம் அமைப்பில் 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒருவர் ரங்கநாதன் மற்றவர் காரைக்குடி சுந்தரம். மூன்றாவது சிவகாசியில்சொக்கர் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆர்.எம்.வீரப்பனுக்கு 2 சீட்:
இதுவரை கருணாநிதியின் மனதில் இடம் பிடித்து வந்த ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகத்திற்கு இந்த முறை தேர்தலில் இடம்கொடுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். கழகத்திற்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சி திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும். கட்சிப் பொதுச்செயலாளர் ஜெகத்ரட்சகன், முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய பின் இந்த உடன்பாடு ஏற்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications