நாடாளுமன்றம் மீண்டும் ஸ்தம்பிப்பு
டெல்லி:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக வாஜ்பாய் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் எனஎதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் திங்கள்கிழமை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.
தெஹல்கா டாட்காம் என்ற இன்டர் நெட் நிறுவனம் பல அரசியல் தலைவர்கள் ஆயுதபேர ஊழலில் ஈடுபட்டிருப்பதாக இந்த மாதம் 14-ம் தேதி வீடியோ ஆதாரங்களுடன்வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள்வற்புறுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைககள்பாதிக்கப்பட்டன.
சென்ற வாரம் புதன், வியாழன், வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகளின் அமளியால்நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட முடியவில்லை. சனி, ஞாயிறுவிடுமுறைக்குப்பின் நாடாளுமன்றம் மீண்டும் திங்கள்கிழமை கூடியது.
ஆனால், இரு அவைக்களிலும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கூடிவாஜ்பாய் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வாஜ்பாய் அரசுக்கு எதிரானகோஷங்களில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எந்த விதமானநடவடிக்கையிலும் ஈடுபடாமல் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் நடவடிக்கைகள்தொடர்ந்து நடைபெறுமா என்பது சந்தேகமே.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications