நாங்கள் தவறு செய்யவில்லை: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தெஹல்கா டாட் காம் இணைய தளம் கூறியுள்ள ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எந்தத் தவறும் செய்யவில்லைஎன்று பிரதமர் வாஜ்பாய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வாஜ்பாய் பேசியதாவது:

ஆயுதப் பேர ஊழல் வழக்கிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்வலியுறுத்தி வருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதத் தவறும் செய்யாத போது நாங்கள் பதவி விலகத் தேவையில்லை. ஆயுதப் பேர ஊழல் வழக்கு தொடர்பாகஎவ்வித விசாரணைக்கும் தயாராக இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறுகையில், எதிர்க்கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ராஜினாமா செய்ய வேண்டும் என்றுகூறுவதை நிறுத்தும் வரை நாடாளுமன்றத்தில் அமைதியான சூழ்நிலை நிலவாது. மேலும் நாடாளுமன்றத்தில் ஜனநாயகமும் இருக்காது.

தெஹல்கா டாட் காம் இணையதளம் கூறியுள்ளது போல் ஆயுதப் பேர ஊழல் வழக்கு எதிலும் பாஜக சம்பந்தப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள்,ஆயுதப் பேர ஊழலை மையமாக வைத்து வாஜ்பாய் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி வருவது தவறானது.

இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில், பாஜக தலைவர் பங்காரு லட்சுமண், சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி எந்தத் தவறும் செய்யவில்லை.எந்தப் பேரமும் நடக்கவில்லை.

அதே போல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசும் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆயுதப் பேர ஊழலைக் காரணம் காட்டி இவர்களைராஜினாமா செய்ய வைத்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.

இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் எவ்வித ஊழலும் நடக்கவில்லை.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, பெட்ரோலியத்துறை அமைச்சர் கே.டி.மாளவியா மேல் லஞ்சம் வாங்கியதாகப் புகார் கூறப்பட்டது.

அப்போது ஜவஹர்லால் நேரு நீதிபதி ஒருவரை வைத்து மாளவியாவை விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியது நிருபிக்கப்பட்டபிறகேமாளவியா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆயுதப் பேர ஊழல் வழக்கில் வாஜ்பாய் அரசு எவ்வித விசாரணைக்கும் தயாராக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்தால் அதையும் எதிர்நோக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தயாராக இருக்கிறது என்று அத்வானி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+