சென்னையைக் கலக்கிய கம்யூ. ஆர்ப்பாட்டம்
சென்னை:
தெஹல்கா டாட் காம் போலி ஆயுதப் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ராஜினாமா செய்யக் கோரி சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் தலைமையில்மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெஹல்கா டாட் காம் நிறுவனம் சமீபத்தில், பாதுகாப்புத் துறையில் ஆயுத பேர ஊழல் நடந்து வருவதாக செய்திவெளியிட்டது. பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன், அமைச்சர் ஜெயா ஜெட்லி மற்றும் சில ராணுவ அதிகாரிகள்இதற்காக லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகளையும் அவர்கள் வெளியிட்டனர்.
நாடு முழுவதையும் கலக்கியுள்ள இந்த விவகாரத்தை இப்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. பாரதீயஜனதாக் கட்சிக்கு எதிராக எந்த விவகாரமும் சிக்காததால் தவித்து வந்த எதிர்க்கட்சிகளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல அமைந்துள்ளது தெஹல்கா டாட் காம் நிறுவன விவகாரம்.
வாஜ்பாய் தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலகக் கோரி சென்னையில் இடதுசாரிக் கட்சிகள்செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. சென்னை அரசு பொது மருத்துவமனைமுன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்தன. இதில்,அ.தி.மு.க, தமாகா, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் உள்ளிட்ட 18 கட்சிகள் கலந்துகொண்டன.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சங்கரய்யா,அ.தி.மு.க அவைத் தலைவர் காளிமுத்து, எம்.பி. சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், பீட்டர்அல்போன்ஸ், சோ.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல்லத்தீப், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இடதுசாரிகள் மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு பெருமளவுகூட்டம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications