பிஜியில் இந்து கோவில் சூறையாடல்
சுவா(பிஜி தீவுகள்):
இந்துக் கோவில்களை தீவிரவாத கும்பல்கள் தாக்கி வருவதால் பாதுகாப்பு தருமாறு பிஜியில் வாழும் இந்துக்கள் அந்நாட்டு அரசிடம் கோரிஉள்ளனர்.
இந்திய வம்சாவளியினருக்கு சொந்தமான கங்கம்மன் கோவில் ஒன்று பிஜியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. தீவிரவாத கும்பல் ஒன்று இந்தகோவிலினுள் அத்துமீறி நுழைந்து சூறையாடியது.
இந்துக்களின் புனித நூலான ராமாயணம் வைக்கப்பட்டு இருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த 300 டாலர் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.கோவில் சிலைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவிலின் நிர்வாகி தவினேஷ் ரெட்டி தெரிவித்த தகவலில், அவர்கள் கோவில் சொத்துகளுக்கு விளைவித்த சேதத்தை விட கோவிலின்புனிதத்தன்மையை சீரழித்தது தான் இந்து சமுதாயத்திற்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய இனவாத செயல்களை ஒடுக்க பிஜி அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களுக்கு அளிக்கப்படும் தண்டணை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications