ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்கள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதைக் கண்டித்து சென்னைஇலங்கைத் தூதகரம் முன்பு தி.மு.க இளைஞரணி சார்பில் செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் போராட்டத்திற்குத் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கணக்கான தி.மு.கஇளைஞரணியினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தினருக்கிடையே ஸ்டாலின் பேசுகையில், இலங்கை கடற்படை வீரர்கள் அடிக்கடி தமிழக மீனவர்கள் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தி வருவது தொடர்கதையாகி விட்டது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோரி இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக, தி.மு.க தலைமையின் அனுமதியோடு இந்தஅமைதி வழி ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார் ஸ்டாலின்.

பின்னர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நகர தி.மு.க செயலாளர்கள் பரிதி இளம்வழுதி, பலராமன் உள்ளிட்டதி.மு.க. குழுவினர் இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை எதிர்த்து ஸ்டாலின் நடத்தும் முதல் போராட்டம்இது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் தமிழகத்தில் சட்டசபை வரவிருக்கும் நேரத்தில் மீனவர்களுக்குஆதரவாக ஸ்டாலின் போராட்டம் நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+