தனித்து போட்டியிடுகிறது லெனினிஸ்ட் கம்யூ.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சிதனித்து போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தமிழக செயலாளர் பாலசுந்தரம் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர் கூறுகையில், ஆளும் தி.மு.கவும், அ.தி.மு.கவும் மக்களுக்குஎதிரான கட்சிகள். தலித் கட்சிகள் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதன் மூலம்தலித்களுக்கு துரோகம் செய்து விட்டனர்.
நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 20 தொகுதிகளில்தனித்து போட்டியிட உள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. அணியில் இருக்கும் தலித் கட்சிகள் அந்த அணியிலிருந்து பிரிந்து வந்து இடதுசாரி கட்சியுடன்இணைந்து ஒரே அணியாக போட்டியிட வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications