ஊனமுற்றோர் பள்ளி நிர்வாகிக்கு அமெரிக்க பட்டம்
கோவை:
ஊனமுற்றோர் பள்ளி நிர்வாகிக்கு அமெரிக்க பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் சிறுவயது முதலே குரும்பபாளையத்தில் ஒரு ஊனமுற்றோர் பள்ளியை நடத்தி வருகிறார்.
கை, கால்கள் வளர்ச்சி குன்றிய ஊனமுற்ற குழந்தைகளைத் தேர்வு செய்து 110 குழந்தைகளுக்கு ஒரு பள்ளியை இவர் உருவாக்கியுள்ளார். யுனைடெட் உடல்ஊனமுற்றோர் பள்ளி என்ற இப்பள்ளியை இவர் கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பான முறையில் நிர்வகித்துள்ளார்.
கல்விப் பணியுடன் இலவச கண்சிகிச்சை முகாம், தொழுநோய் ஒழிப்பு முகாம், பழங்குடியினர் மேம்பாட்டு முகாம், என பல்வேறு சமுதாயப் பணியை அவர்மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு, தேசிய அளவிலான விருதுகளையும், மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறுபட்டங்களையும் பெற்ற இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள சர்வதேசப் பல்கலைக் கழகம் கல்விப் பணியைச் சிறப்பித்துடாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications