புதுவையில் பா.ம.க.ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஒத்துக்கொண்டதாக பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் பா.ம.க. கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார்.
பாண்டிச்சேரி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் முதல் இரண்டரை ஆண்டுகள் பா.ம.க. ஆட்சி அமைக்கும். இதற்கு காங்கிரஸ் கட்சி ஒத்துகொண்டு உள்ளது.
தொகுதி பங்கீடு மற்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் யார் ஆட்சி அமைப்பது என்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட அதிமுக கூட்டணி பாண்டிச்சேரியிலும் தொடரும். பாண்டிச்சேரியில் 3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும். அதில் மாற்றம் இல்லை என காங்கிரஸ் கட்சி கூறி வந்தது. இதனால் தான் அதிமுக கூட்டணியில்காங்கிரஸ் கட்சியும், மூப்பனாரின் த.மா.கா.வும் சேருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழகத்தில் மட்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்தது. பாண்டிச்சேரி கூட்டணி தனியாக முடிவுசெய்யப்பபடும் என அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ராமதாஸ் இவ்வாறு கூறி உள்ளது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது தெரியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications