வாஜ்பாய் ராஜினாமா செய்ய கோரி த.மா.கா. போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆயுத பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது:

பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதாகவாஜ்பாய் கூறியுள்ளார்.

வாஜ்பாய் அரசு பதவி விலக கோரி இடது சாரி கட்சிகள் இந்த மாதம் 20-ம் தேதி நடத்தவிருக்கிற போராட்டத்தில்த.மா.காவின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

டெஹல்கா டாட் காமால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இது குறித்துவிசாரணை செய்யப்படும் என கூறியோ அல்லது எதிர் கட்சியினரை ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வருமாறு கூறியோ அலட்சியப்படுத்துவது தவறு.

ஆயுத பேர ஊழலில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்குபா.ஜ.க. அரசுதான் காரணம்.

இவ்வாறு மூப்பனார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+