பிரஜேஷை நீக்க சிவசேனை வலியுறுத்தல்
மும்பை:
ஆயுதப் பேர ஊழலில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங்கை நீக்கவேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனைக் கட்சித் தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனை பத்திரிக்கை சாம்னாவில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கம் குறித்த விவரம்:
தெஹல்கா டாட் காம் இணையதளம் பாஜக அரசு மேல் ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. லஞ்சம் வாங்கியதாகப் புகார் கூறப்பட்டபாஜக தலைவர் பங்காரு லட்சுமண், சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆயுதப் பேர ஊழலுக்குப் பொறுப்பேற்று ஜார்ஜ் பெர்னான்டசும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும்பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரஜேஷ் மிஸ்ராவும், கே.என்.சிங்கும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள்எழுந்துள்ளது.
இதற்கு சிவசேனாவும் ஆதரவு தருகிறது. சர்ச்சைக்குரிய அதிகாரிகள் பிரஜேஷ் மிஸ்ரா, என்.கே.சிங் மற்றும் பிரதமரின் வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன்பட்டாச்சாரியா ஆகியோரும் நீக்கப்பட வேண்டும்.
தெஹல்கா டாட் காம் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ள ஆயுதப் பேர ஊழல் விவகாரம் மத்திய அரசில் மட்டுமல்ல. பாதுகாப்புத்துறை மற்றும்ராணுவத்திலும் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பிரஜேஷ் மிஸ்ராவின் பங்கு என்ன என்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும். அவர் பிரதமர் அலுவலகத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
99 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது பிரஜேஷ் மிஸ்ரா சரியாக செயல்படவில்லை என்றகுற்றச்சாட்டுக்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.
தற்போது தெல்ஹா டாட் காம் வெளிக்கொண்டு வந்துள்ள ஆயுதப் பேர ஊழலையடுத்து மிஸ்ரா, சிங் மற்றும் பட்டாச்சாரியா ஆகியோர் நீக்கப்படவேண்டும்.
இவ்வாறு சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார் தாக்கரே.
முன்னதாக, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஆயுதப்பேர ஊழலை வீடியோப்பட ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வந்தது தெஹல்கா டாட் காம்இணையதளம்.
இதையடுத்து, லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண், சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர்ராஜினாமா செய்தனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசும் ராஜினாமா செய்தார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேசியஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications