புத்தரை உடைத்ததால் மழை வந்தது: தலிபான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

புத்தர் சிலையை உடைத்ததால் இறைவன் மழையை தந்து எங்களைஆசிர்வதித்துள்ளார் என தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற 1,400 ஆண்டுகளுக்கு முன்புகட்டப்பட்ட பாமியன் புத்தர் சிலையை தலிபான் அரசு உடைத்து வருகிறது. பல உலகநாடுகளும் புத்தர் சிலையை உடைக்க வேண்டாம் என தலிபான் அரசை கேட்டுக்கொண்டன. ஐக்கிய நாடுகள் சபையும் புத்தர் சிலையை உடைக்க வேண்டாம் எனதலிபான் அரசை கேட்டுக் கொண்டது.

ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் தலிபான் அரசு புத்தர் சிலைகளைஉடைத்துத் தள்ளி வருகிறது.

4 ஆண்டுகாலமாக கடும் வறட்சியால் தவித்த வரும் ஆப்காஸ்தானில் கடந்த வாரம்மழை பொழிந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த மழைக்கு காரணம்புத்தர் சிலையை உடைத்தது தான். அதனால் இறைவன் மகிழ்ந்து போய் மழை பொழியவைத்து ஆசிர்வதித்துள்ளார் என தலிபான் தலைவர் கூறி வருகிறார்.

இது குறித்து தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர் பத்திரிக்கைக்கு அளித்தபேட்டியில், சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த 3 அறிஞர்கள் என்னைதலைநகர் கான்டாகரில் பார்க்க வந்தனர். ஆப்கானிஸ்தான் வறட்சியால் வாடுவதற்குகாரணம். புத்தர் சிலைகைள உடைப்பதை தாமதித்து வருவதுதான் என்றனர்.

நாங்கள் புத்தர் சிலையை உடைத்தவுடன் இறைவன் மழையை கொடுத்துள்ளார். புத்தர்சிலையை பாதுகாக்க மேற்கத்திய நாடுகளிலிருந்து பணத்தை பெற்றுக் கொண்டால்எங்கள் நாட்டில் மழை பெய்யவதற்கான வாய்ப்பில்லை.

மதசார்பற்றவர்களுக்கும், உலக மக்களும் புத்தர் சிலை உடைப்பிற்கு பின்னால் உள்ளபின்னணியை புரிந்து கொள்ள முடியாது.

புத்தர் சிலையை உடைக்கக்கூடாது என சொல்வது தவறு. ஏனென்றால் புத்தர்சிலையை யாரும் வழிபடுவதில்லை. வழிபடுவது என்றால் சிலைக்கு முன்னால் தலைவணங்குவது மட்டுமல்ல. சிலையை மதிப்பது கூட வழிபாடுதான், மேற்கத்திய நாடுகள்வறட்சியால் வாடும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் , கல்லால்செய்யப்பட்டிருக்கும் சிலைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+