டீக்கடையில் பஸ் மோதி 3 பேர் பலி
கோவை:
திருப்பூர் அருகே பஸ், டீக்கடையில் மோதியதில் பள்ளி தாளாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூரிலிருந்து திங்கள்கிழமை மாலை தேனிக்கு ஒரு பஸ் புறப்பட்டுச் சென்றது. திருப்பூரிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆண்டக்காபாளையம் என்ற இடத்தில் பஸ் சென்றபோது சில வாலிபர்கள் ஆற்றில்குளித்து விட்டு ரோட்டைக் கடந்தனர்.
அப்போது அவர்கள் பஸ் வருவதை அறியாததால் அவர்கள் மீது பஸ் மோதி விடாமல் இருக்க டிரைவர்,பஸ்சை சற்று ஓரங்கட்டினார்.
அந்த சமயத்தில் எதிரே மொபட்டில் திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரணியம் (52) என்பவர் வந்துகொண்டிருந்தார். அவர் மீது பஸ் மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே பாலசுப்ரமணியம்உயிரிழந்தார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர், அருகில் இருந்த டீக்கடை மற்றும் பல கட்டிடங்களில் பஸ்சைமோதினார். இந்த மோதலில், டீக் குடித்துக் கொண்டிருந்த பெரிய குமாரபாளையத்தைச் சேர்ந்த பண்ணாடி(40), அவிநாசியைச் சேர்ந்த சண்முகவடிவேல் (48) ஆகியோர் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications