செயற்குழுவைக் கூட்டுகிறது த.மா.கா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை சென்னையில் கூட்டப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மொத்தமாக 47 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து அக்கட்சியின் தலைவர் இளங்கோவன், தமாகா தலைவர்மூப்பனாரை நேரில் சந்தித்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமைகூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம்கூறுகையில், அவசரமாக செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 10.30 மணியளவில்சத்தியமூர்த்தி பவனில் இக்கூட்டம் நடைபெறும்.

கட்சித் தலைவர் மூப்பனார் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார். இதில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கட்சியின்பொதுக்குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவு உறுப்பினர்களுக்கு அவசரமாக அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்றார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தரப்பு கருத்துக்களை இளங்கோவன், மூப்பனாரிடம் கூறியுள்ளதாகவும்அதுகுறித்து விவாதிக்கவே, அவசரமாக செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது எனவும் தமாகா தரப்பில்கூறப்படுகிறது.

இதுதவிர ப.சிதம்பரம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும்கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+