திருச்சி மாநகராட்சிக்கு ரூ 21 கோடி வரி பாக்கி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

வரி கட்டாமல் பாக்கி வைத்திருக்கும் பொதுமக்களிடம் அதை வசூலிக்க திருச்சி மாநகராட்சி தீவிர நடவடிக்கைள்மேற்கொள்ளும் என தற்காலிக மேயர் எமலி ரிச்சர்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சியின் பட்ஜெட் ஆண்டறிக்கை குறித்து நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது:

திருச்சி மாநகராட்சிக்கு ரூ 21 கோடி வரி பாக்கி உள்ளது. இதை வசூலிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகள்மேற்கொள்ளும்.

திருச்சியில் வரும் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க திருச்சி மாநகராட்சி அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளும். அதற்கான நடவடிக்கைகளில் இப்போதே மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

மாநகராட்சியில் 475 ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களைநிரந்தரமாக்கக்கோரி ஏற்கனவே மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவர்கள் விரைவில்நிரந்தரமாக்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் முத்துவீரன் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 4ஆண்டுகளில் மட்டும் ரூ 75 கோடி செலவில் பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இடங்களில் ரூ 120 கோடி செலவில் கழிவுநீர்க்கால்வாய் அமைக்கும்பணி தொடங்கப்படும்.

பிற இடங்களில் கழிவுநீர்க் கால்வாய்கள் அமைக்க ரூ 54 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+