கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவைசிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு குறித்த விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அல்-உம்மா தலைவர் பாஷா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர்மதானி உள்ளிட்ட 167 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவதால், செவ்வாய்க்கிழமை அங்கு காவல்பலப்படுத்தப்பட்டிருந்து.
தனக்காக வாதாடுவதற்கு சட்ட உதவித்துறை மூலம் வழக்கறிஞர் அமைத்துக் கொள்ள கால அவகாசம் வேண்டும்என பாஷா கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நீதிபதி செல்வம் இந்த வழக்குவிசாரணையை ஏப்ரல் மாதம் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
யு. என்.ஐ.












Click it and Unblock the Notifications