பவானி அருகே தங்கப் புதையல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
பவானி அருகே 56 தங்க நாணயங்கள் கொண்ட புதையல் கிடைத்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டையில் மதுரை வீரன் கோயில் உள்ளது. இந்தகோயில் அருகே உள்ள நிலத்தில் பாலகிருஷ்ணன் விலைக்கு வாங்கினார்.
அந்த நிலத்தில் மோட்டர் வைக்க சிறிய அறை கட்ட பாலகிருஷ்ணன் அஸ்திவாரம் தோண்டினார். அப்போதுஅங்கு சிறிய பானை ஒன்று கிடைத்தது. அதில், 100 கிராம், 50 கிராம் எடை கொண்ட 56 தங்க நாணயங்கள் அதில்இருந்தது.
இந்த நாணயங்களில் சிறிய சிறிய கோடுகள், குதிரைச் சின்னங்கள் ஆகியவை அதில் இருந்தன. இது குறித்துதாசில்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்க காசுகளைக் கைப்பற்றினார்.
இந்த நாணயங்கள் அனைத்தும் வரலாற்று ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications