த.மா.கா. செயற்குழு கூடியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர செயற் குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
ப.சிதம்பரத்தின் அதிருப்தி, அவரது புதிய அமைப்பினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, தேர்தல் பிரசார உத்திகள், காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்க வேண்டியதொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக அவசர செயற்குழுவை கூட்டியது தமாகா.
கட்சித் தலைவர் மூப்பனார் தலைமையில் புதன்கிழமை காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் துவங்கியது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள்உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. மாலையில் இதுதொடர்பாகதீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications