மாஜி மந்திரி முல்லைவேந்தனுக்கு திமுக நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை குறை கூறியதற்காக கட்சி தலைமையிடம் இருந்து நோட்டீஸ் பெற்று உள்ளார்மாஜி அமைச்சர் முல்லைவேந்தன்.

தனக்கு சம்பந்தம் இல்லாத அறநிலையத்துறையின் நிலக்குத்தகை ஏலத்தில் தலையிட்ட முல்லைவேந்தன் அறநிலையத்துறை அதிகாரி அன்புமணியைதாக்கியதால் பதவி இழந்தார்.

பின்னர் இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் பெற்றபின் அரூரில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது தன்னை இந்த வழக்கில் மாட்டிவிட்டவர்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் பாலச்சந்திரன் மற்றும் சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.எஸ்.பி. மற்றும்அறநிலையத்துறை அதிகாரி அன்புமணி ஆகியோர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன் அவர்கள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்என வீர வசனம் பேசினார்.

போலீஸ் துறை முதல்வரின் கையில் உள்ளது. மாவட்ட கலெக்டர்களும் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். அவர்களுக்கு சவால் விட்டதன் மூலம்மறைமுகமாக முதல்வருக்கே சவால் விட்டது போல் திமுக தலைமை கருதுகிறது.

முல்லைவேந்தனின் பேச்சுகள் போலீஸ் உளவுத்துறை மற்றும் அவருடைய அதிருப்தியாளர்கள் மூலம் முதல்வர் காதை எட்டியது.

உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பிய திமுக தலைமை அவருக்கு காரண விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறை மற்றும் கலெக்டர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தியது முதல்வரை அவமரியாதை செய்ததுபோன்றது.

இது தொடர்பான் விளக்கத்தை கட்சித்தலைமைக்கு 5 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

பதவி விலகல் கடிதத்தை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு தலைமறைவான முல்லை வேந்தன் முன்ஜாமீன் பெற்ற பின்பே ஆதரவாளர்களை சந்திக்க வந்தார்.

வந்ததும் வராததுமாக முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியதால் நோட்டீஸ் பெற்றுள்ள முல்லை வேந்தன் தனதுஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு சென்னை செல்வார் என கூறப்படுகிறது.

இதனிடையே, இவருடைய கூட்டத்தில் பங்கேற்ற ஆதரவாளர்களான அரூர் எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிரகாசம், பால்வளத் தலைவர்ராஜசேகரன், அரூர் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கட்சி தலைமையிடம் இருந்து நோட்டீஸைஎதிர்பார்த்து உள்ளனர்.

முல்லைவேந்தன் ஆதரவாளரும் உறவினருமான மாவட்ட இளைஞரணி செயலாளர் முல்லைசெழியனுக்கும் கட்சியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+