குஜராத்துக்கு பால் பவுடர் அனுப்புகிறது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ 1 கோடி மதிப்புள்ள 135 மெட்ரிக் டன் பால் பவுடரை தமிழகஅரசு அனுப்பி வைத்துள்ளது.
சென்ற ஜனவரி மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்இறந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்தனர்.
பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு நிதி திரட்டியது. வசூலான ரூ 35 கோடி நிதியை மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் மூலம் பிரதமருக்கு அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் கருணாநிதி.
இது தவிர தமிழக அரசு ரூ 5.64 கோடி மதிப்புளள்ள நிவாரணப் பொருட்களையும் குஜராத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
தற்போது குஜராத் மக்களுக்கு மேலும் உதவும் விதமாக ரூ 1 கோடி மதிப்புள்ள 135 மெட்ரிக் டன் பால் பவுடரைஅனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications