53 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாத கிராமத்துக்கு பஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை:

இந்திய சுதந்திரத்திற்குப் பின் ஒரு கிராமத்திற்குச் பஸ் வசதி கிடைத்துள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள்மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறையில் சக்தி-முதலநார் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 53ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை.

இதனால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்து வர வேண்டும்என்றால், நோயாளிக்கு தொட்டில் கட்டி அதில் அமர வைத்து இருவர் 22 கிலோ மீட்டர் தூரம் வரை கால்நடையாகஅழைத்து வர வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் உ ள்பட பொதுமக்கள் கடும்போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு எம்.எல்.ஏ. சிங்காரவேலு மேற்கொண்ட முயற்சியால், வால்பாறையிலிருந்து 14கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கவர்க்கல் எஸ்டேட் என்ற பகுதியிலிருந்து சக்தி முதலநார் எஸ்டேட் பகுதிக்கு ரோடுஅமைக்கும் பணி துவங்கியது.

முதலாநார் எஸ்டேட் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சக்தி 12 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. எஸ்டேட்பகுதிகள் நிறைந்துள்ள இப்பகுதிச் செல்ல 35 குழாய்ப் பாலங்கள், 10 கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் நான்குகாங்கிரீட் பாலங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வால்பாறை சிறப்பு நிலைப் பேரூராட்சிப் பகுதியில் இந்தரோடு அமைத்ததன் மூலம் மக்கள் பெருமளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முதன் முதலாக செவ்வாய்க்கிழமை பஸ் இயக்கத்தை எம்.எல்.ஏ சிங்காரவேலு துவக்கி வைத்தார். இந்த பஸ்சில்அந்தப் பகுதி எஸ்டேட் தொழிலாளர்கள் ஏறி பரவசம் அடைந்தனர்.

மேலும், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு "ஓசி பயணம் மேற்கொண்ட பின்னர் இந்த பஸ் இயங்க ஆரம்பித்துள்ளது.விழாவில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் சந்தானம், "" இனி இந்த பஸ், தினம் 18 முறை இந்தப் பகுதிக்குவந்து செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+